fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை..

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 19:05

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைக்கு சுகாதார மேம்பாட்டுக்காக 30 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். நாடெங்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 680 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அமுல்படுத்தப்படும் தேசிய செயல்த்திட்டம் தொடர்பில் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அமைச்சர் சகல அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கல்விஅமைச்சு மாகாண கல்வி அதிகாரிகள் சமூக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினருடன் இணைந்து செயல்படுத்துவதற்கான தேசிய திட்டம் தொடர்பில் விசாரிக்காமல் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை கண்டிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 19:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க