சுகாதார அமைச்சருக்கும் கர்தினாலுக்கும் இடையே சந்திப்பு
Related Articles
சுகாதார அமைச்சர் பாவ் பவித்ரா வன்னிஆராச்சி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
COVID 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர், வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மே ற்கொண்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் பேராயர் சுகாதார ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.