fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குருநாகல் வில்கொட பகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 19:21

குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம்ஆண்டு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

குருநாகல் நகர அபிவிருத்தி மற்றும் புறநகர அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே முஸம்மில் இவ்வாறு தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்படட வீடமைப்பு திட்டம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் கைவிடப்பட்டிருந்தது.

வில்கொட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களின் லயன் குடியிருப்பு அடிக்கடி நீரில் மூழ்குவதனால் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நகர அபிவிருத்திஅதிகார சபையினால் இத்திட்டம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2015 ஆம்ஆண்டின் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பகுதியில் எவ்வித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென உரையாற்றிய வடமேல் மாகாண முதலமைச்சர் இதன் போது தெரிவித்தார்;.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 19:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க