நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றினால் இவ்வருடம் புனித ரமழான் நோண்பு கால உற்சவங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் பள்ளி வாசல்களுக்கு சென்று இவற்றை மேற்கொள்வதால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படலாமெனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயணங்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தூர நோக்குடன் புரிந்துணர்வுடனும் செயல்படுமாறும் அச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்குரணை ஜூம்ஆ பள்ளி வாசலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.