கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 7 பேர் மற்றும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் நால்வர் அதில் உள்ளடங்குகின்றனர். மூவர் முல்லையேறிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது ஆயிரத்து 55 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 426 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.