fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்..

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:48

உலகில் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிக ரோஹின்ய அகதிகள் வசிக்கும் தெற்கு பங்களதேஷிலுள்ள அகதி முகாமில் கடந்த 14 ம் திகதி இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐநா குறிப்பிட்டுள்ளது. எனினும் நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க