fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுகாதார ஆலோசனைகள் அடங்கிய விளக்கபடங்களை காட்சிப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:38

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார ஆலோசனைகள் அடங்கிய விளக்கபடங்களை காட்சிப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ‘புதிய வாழ்க்கை முறை’ என்ற தொனிப்பொருளின் கீழ் மக்கள் நடமாடும் பொது இடங்கள், பஸ் தரிப்பிடங்கள், பஸ் நிலையங்கள், சுப்பர் மார்க்கட்டுகள் மற்றும் அலுவலங்களை கேந்திரமாக கொண்டு காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தடுப்பு படையணியின் செயற்பாட்டு மீளாய்வு குழு கூட்டத்தின்போதே அது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வைத்திய துறை அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்தியர்கள் 35 பேர் கலந்து கொண்டதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க