fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ் சேவை..

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 13:07

மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, வடமாகணத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று முதல் தனியார் பிரிவினர், மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவையை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் தடைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பஸ் சேவையை மாகாணத்துக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையைப் பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸில் பயணம் செய்யும் பொதுமக்கள் கைகளுக்குக் கையுறைகளை அணிவதோடு, முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க