நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஒலுவில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, நோய் தொற்றிலிருந்து இதுவரை 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 112 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.