தென் அமெரிக்க நாடான சிலியில் உணவுத்தட்டுப்பாடு பிரச்சினையினால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது இரு தரப்பினருக்கும் இடையில், மோதல் ஏற்பட்டுள்ளது.
சிலி தலைநகர் சண்டியாகோவின் புறநகர் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில், உணவுத்தட்டுப்பாடு தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தினாலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.
வீதிகளில் திரண்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போதுமான உணவுகள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி Sebastian Pinera உறுதியளித்துள்ளார்.