ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளை திறப்பதற்காக வழிகாட்டல்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த வாரமளவில் அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா துறைகளில் சேவை வழங்கும் தொழிற்துறையார்கள் அமைச்சரிடம் அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவதற்கும் அவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.