fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 12:33

பலத்த மழை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்து. நாளை பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, கலவான, கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. மண்சரிவுக்கான அறிகுறிகள் தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க