கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால், 19 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கரச்சி, கண்டாவளை, மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட அக்கராயன், வட்டகச்சி, கவுதாரமுனி, பூன்னெய் நீராவியடி பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்கு சேதேமற்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் காற்று கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் கூரைகள் வீசியெறியப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண சேவைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.