கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.
யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் இடம்பெறவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைப்பெற்றால் படத்தை டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.