இஸ்ரேலுக்கான சீன தூதுவர் Du Wei, Tel Aviv நகரில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
57 வயதான அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர் இயற்கை மரணம் எய்தியிருக்கலாமென இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கான சீன தூதுவராகக் கடமையாற்றிய Du Wei, கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.