உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது. 48 இலட்சத்திறகும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 இலட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 212 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 15 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். 90 ஆயிரத்து 978 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.