புத்தளத்திற்கு சட்டவிரோதமாக மாடுகளைக் கொண்டுசென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு சட்டவிரோதமாக 24 மாடுகள் கொண்டுசெல்லப்பட்ட போது அநுராதபுரம் – கலாஓயா பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்த சந்தேகநபரையும் லொறியையும் மற்றும் மாடுகளையும் தம்புத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.