fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்…

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 16:56

கொரோனா வைரஸூக்கு எதிரான 8 தடுப்பூசிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் மேலும் 110 ஆய்வுகள் இடம்பெறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் மற்றும் அரச மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. மனிதர்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்க முடியுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இவ்வருட இறுதியில் தடுப்பூசியை தயாரிக்க முடியுமென ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க