fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 14:44

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு, பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு விசேட பங்கு வகிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். இன்று அனுஷ்டிக்கப்படும் தொலைதொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்கால தலைமுறையினரின் தேவைகளை பூர்த்தி செய்வற்கென உரிமைகளுக்கு சேதம் ஏற்படாத வகையில், தற்போதைய தலைமுறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அபிவிருத்தி அதனூடாக உறுதிசெய்யப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் தொலைதொடர்பு மற்றும் சமூக தினத்தை முன்னிட்டு அறியொன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சார் அபிவிருத்தி பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு பிரதான பலத்தை தருவதாக பிரதமர் இதில் குறிப்பிட்டுள்ளார். சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலை நீண்டகாலத்திற்கு பாதுகாப்பதற்கும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க