பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை
Related Articles
பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்குள் அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த ஒருரிரு தினங்களாக பெய்துவரும் பலத்த மழையை அடுத்து சில மாவட்டங்களில் மின் விநியோக கட்டடைப்பு கோளாறு ஏற்பட்டுள்ளது.
குருணாகல், கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாவனையாளர்களுக்கு மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும் தற்போது மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு மின் விநியோகம் மீள வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களுக்கு இன்றைய தினத்திற்குள் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.