தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த ஒரு தொகுதியினர் வீடு திரும்பினர்…
Related Articles
தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த வழிமுறைக்கு அமைய, அவர்கள் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்படலாம் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.