விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனையடுத்து, ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். குறித்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொவிட் – 19 காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மீண்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதால் படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.