பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பிரதேச வாசிகளுக்கும் குற்றச்செயல்களில் ஈடுப்படும் குழுக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், நகரில் உள்ள குடிசை வாழ் மக்கள் மத்தியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படும் குழுக்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துள்ளனர். இதனையடுத்து, மக்களுக்கும் குறித்த குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, ரியோ டி ஜெனிரோ நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக பிரேசில் தகவல்கள் தெரிவிக்கின்றன.