fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மோதலில் இருவர் பலி : ஹொரணையில் சம்பவம்…

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:31

ஹொரணை, அரமனாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரமனாகொல்ல பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது, கூரிய பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் ஹொரணை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளனர். அவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில், ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo