fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:24

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகுமென சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை போட்டி அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலிலேயே போட்டி நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கொவிட்19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:24

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க