இலங்கை எதிர்கொண்டுள்ள சூறாவளி அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நண்பகல் நிலவிய வானிலையையடுத்து இந்த அனர்த்தம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவான தாழ் அமுக்கப் பிரதேசம் தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 760 km தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று விரைவாக தீவிரமடைந்து சூறாவளியாக மாறுவதுடன் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் பலமிக்க சூறாவளியாக வலுவடையும்.
இது நாளை வரையில் வடக்கு-வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து சென்று பின்னர் வடக்கு-வடகிழக்குத் திசையினூடாக திரும்பி எதிர்வரும் 18 முதல் 20 ம் திகதி வரையில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரும். இந்த சூறாவளிக்கு அம்பான் ( Amphan ) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இத் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில்த ற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/WWO2020051603S-page-001.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/WWO2020051603S-page-002.jpg”]