நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் ஒருவர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்துள்ளார். வல்தெனிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர்கள் 48 மற்றும் 65 வயதுடையவர்களென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்