fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 08:52

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 52 வீதமான நிதியை குறைந்த வட்டியுடன் சலுகைக் கடன் ரீதியாக அறவிடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரம் தொடர்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 16 விதமான விவசாய உரங்களுக்கு நிர்ணய விலையை தீர்மானிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரம் பகிர்ந்தளிப்பு மற்றும் பெருந்தோட்ட துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 08:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க