fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை மேலும் 50 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 12:56

5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை மேலும் 50 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மே மாதத்திற்கென 51 இலட்சத்து 44 ஆயிரத்து 46 பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்கென 2 ஆயிரத்து 572 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இதனை வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும். இதில், வாழ்வாதாரத்தை இழந்தோர், சமுர்த்தி பயனாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள், அங்கவீனமுற்றோர் ஆகியோரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கட்சி, இன,மத பேதமின்றி 74 இலட்சம் பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழஙக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதத்திற்கும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க