fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 11:43

நாட்டை சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது கடற் பிரதேசத்தில் இருப்போர் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 11:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo