கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். ஏனைய மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையான ஊரடங்கு சட்ட நடைமுறை அமுலில் இருக்கும். அத்துடன் நாளை 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கள் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்.