இலங்கையின் ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதலாவது முக கவசங்களே இவ்வாறு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை இலங்கைக்கான அமெரிக்க தூ{துவர் எலேனா.பீ.டெப்லிசிடம் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்பட்டது.
பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் இலங்கை ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.சுகுமாரன், பிரன்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அஷ்ரப்ஓமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.