fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொட்டகலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு….

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 20:08

கொட்டகலை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதகாலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. அண்மையில் இப்பிரச்சினை தொடர்பில் வசந்தம் தொலைக்காட்சி செய்தி பிரிவில் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து இதற்கு பலன் கிடைத்துள்ளது.

கொட்டகலை பகுதியில் நீர்வழங்கள் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபையினால் வழங்கும் குடிநீர் கடந்த 3 மாதகாலமாக மஞ்சள் நிறத்துடன் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்தி வந்தனர். இது குறித்து நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபைக்கு முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் ஊடகங்கள் ஊடாக தெரிவித்ததனையடுத்து இது குறித்து ஆராய்வதற்கு பிரதி முகாமையாளர் பியரத்ன சமரதுங்க பிராந்திய முகாமையாளர் கபில் பத்திரன உட்பட நான்கு பொறியியலாளர் கொண்ட குழுவினர் கண்கானிப்பு விஜயம் ஒன்றினை நேற்று மேற்கொண்டிருந்தனர். இதனை பார்வையிட்டதன் பின் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 9ம் திகதி வசந்தம் செய்தியில் குறித்த செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக வசந்தம் செய்திகளுக்கும் ஐ.டி.என் வலையமைப்புக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த நீர்வழங்கள் சபையின் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 20:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க