fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் : லெபனான் 4 நாட்களுக்கு முடக்கம்

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 17:18

கொரோனா வைரஸ் தொறறாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, லெபனான் 4 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இரு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக அரசாங்கம் தளர்த்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது அங்கு வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டை முழுமையாக முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் நூற்றிற்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றாளர்கள் லெபனானில் பதிவாகியுள்ளனர்.

சமூக இடைவெளி பேணல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்துள்ளமையே இதற்கு காரணமென பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், கடைகள், உணவகங்கள் மற்றும் சலூன்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. எனினும் அவற்றை மீண்டும் மூடுவதற்கு லெபனான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 17:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo