கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு
Related Articles
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தப்படவில்லையெனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் செயற்பாடுகளை முறையாக ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. கடந்த 15 நாட்களில் எந்தவொரு தோற்றாளரும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படாமை விசேட விடயமாகும்.
முறையான திட்டங்களுக்கமைய, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையே இதற்கு காரணமாகும். கடந்த வாரம் மக்கள், சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டமையானது திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை கடற்படையின் வன்னி கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.