fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 20:32

பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான  அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் செயலகம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் இக்குழுவை நியமித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலை ஜீன் 20ம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசியல் யாப்புக்கு முரணானது என்பதை அறிவிக்க கோரி ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனு மீதான விசாரணை எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் விசாரிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாமில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக்க அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சட்டதரணி சரித்த குணவர்தன மற்றும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சிலவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களும் இம்மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 20:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க