போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டள்ளனர். கல்கிஸை மற்றும் ரத்மலானை பகுதிகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து 62 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் கல்கிஸை நீதவான் நிதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.