சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மனித நேய வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கும் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
சுயாதீன தொலைக்காட்சியின் மனித நேய செயலத்திட்டத்தின் மூலம் தற்போது கொழும்பு, களுத்துறை, குருநாகல், மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் அனைத்து கலைஞர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஹம்பாந்தோட்ட பிரதேச கலைஞர்களுக்காக ஐரிஎன் மனித நேய செயல்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மெதமுலன கால்டன் இல்லத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அடையாளம் நிமித்தம் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹனவும் கலந்து கொண்டார். அங்குனுகொலபெலஸ்ஸ, லுனுகம்வெஹர, காலி மாத்தறை, வீரவில, ஆகிய பிரதேசங்களில் ஐரிஎன் மனித நேய திட்டம் செயல்படுத்தப்படடது.
இதேவேளை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மனித நேய செயல்த்திட்டத்தின் கீழ் லயன்ஸ் கிலப் இன் பங்களிப்புடன் 5 ஆயிரம் முக கவசங்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகள் கடற்படைக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹன, லயன்ஸ் கிலப்பின் தலைவர் அர்ஜூன அபேசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.