fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச செவிலியர்கள் தினம்

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 15:44

சர்வதேச செவிலியர்கள் தினம் இன்றாகும். செவிலியர்களின் அன்னையாகப் போற்றப்படும் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தினத்தை மையமாகக் கொண்டு, மே மாதம் 12ம் திகதி சர்வதேச செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுகாதார சேவையின் தரத்தை அதிகரிக்க, தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படும் தாதியர்கள் அனைவருக்கும் அமைச்சர் பவித்ரா வன்னயாராச்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கென, தமது வாழ்க்கை, குடும்பம் தொடர்பில் கவனம் செலுத்தாது, செயற்படும் ஒவ்வொரு தாதியர்களையும் அபிமானத்துடன் நினைவுகூருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க, தாதியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பயிற்றுவிப்பு பிரதான தாதி அதிகாரி, புஷ்பா ரம்சானி டி சொய்சா தெரிவித்துள்ளார். இம்முறை 200 ஆவது தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கமைய உலக சுகாதார அமைப்பு, இவ்வருடத்தை உலக தாதியர் வருடமாக பிரடகனப்படுத்தியுள்ளது. தமது உயிரைப் பணயம் வைத்து, ஏனையோரின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படும் தாதியர்களுக்கு நாமும் மரியாதை செலுத்துவோம்.

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 15:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க