fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 14:45

சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தினத்தில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதகாலம் வரை செல்லுமென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். திகதி தீர்மானிக்கப்பட்டதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, 4 நாட்களுக்கு மூடப்படும். முதற்கட்டமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் அழைக்கப்படவுள்ளனர். அதனையடுத்து, உயர்தரம், சாதாரண தரம் மற்றும் அதற்கு கீழுள்ள தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவார்களென கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் கைகளை கழுவுதல் உட்பட அவர்களின் உடல் வெப்பநிலையை கணிப்பிடுவதற்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சால் சகல பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo