fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:01

நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவைகளை முன்னெடுத்து செல்வதே இதன் நோக்கமாகும். சேவையின் தேவை கருதி அவசியமான திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா அனர்த்த காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தை மக்கள் மறக்கக்கூடாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும வகையில், ஊரடங்கு சட்டம் 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை கவனத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டியது கட்டாயமென வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

வழமையான நடவடிக்கைகளை முன்னெடுபப்பதற்கான முயற்சி இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா தொற்று நாட்டிலிருந்து இதுவரை முழுமையாக நீக்கப்படவில்லை. இதற்கு நீண்டகாலம் தேவைப்படுமென விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அது தொடர்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு உடனடியாக பிரவேசிக்க வேண்டும் அல்லது உடனடி தொலைபேசி இலக்கங்களான 1390 அல்லது 1399 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் பொதுவான அறிவுறுத்தலுக்கமைய செயற்படுவது மிக முக்கியமாகும். இந்த பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் கடந்த காலங்களில் வழிகாட்டிகள் அடங்கிய ஆவணங்கள் மூலம் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க