fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பப்படும் நபர்கள் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 16:19

தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பிவைக்கபடும் நபர்கள் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். PCR பரிசோதனையை விட தனிமைப்படுத்தல் செயற்பாடு முக்கியம் வாய்ந்ததென அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் கொழும்பு 15 மோதர மெத்சந்த செவன குடியிருப்பு தொகுதியை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண் சுமார் ஒரு மாத காலம் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அவர் குறித்த பகுதியில் உள்ள இரு வைத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கமைய குறித்த பெண் நெருங்கி பழகிய 60 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் எவருக்கும் வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 16:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க