fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 10:44

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவுகோளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 117 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. கிசார் தீவு உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் நிலஅதிர்வால் அதிர்வுக்குள்ளாகியுள்ளன. மக்கள் அச்சமடைந்த நிலையில் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே பண்டா கரையோரப்பகுதியிலிருந்து 620 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலஅதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க