fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீடுகளுக்கு வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 15:35

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்களின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மாத வாடகை அறவிடுவதை தவிர்க்குமாறும் அல்லது வாடகையில் ஒரு பகுதியை மாத்திரம் அறவிடுமாறும் வீட்டு உரிமையாளர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கென அதிகளவானோர் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியுள்ளனர். சில இடங்களில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தவர்கள், வீடுகளுக்கு சென்றுள்ள நிலையிலும் வாடகைப் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் வாடகைப்பணம் அறவீட்டு விடயத்தில் அனைவரும் மனிதாபிமான ரீதியில் செயற்பட வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 15:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க