fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் விசேட நிகழ்வுகள்

ITN News Editor
By ITN News Editor மே 6, 2020 13:05

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெசாக் வாரத்திற்கமைய, விசேட முத்திரைகள் நான்கு வெளியிடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் முக்கியஸ்தர்கள் சிலர் மாத்திரம் பங்கேற்கவுள்ளனர். இம்முறை தேசிய வெசாக் நிகழ்வு ஹொரணை – கொணபொல, ஒலபோடுவ ரஜ மஹா விகாரையை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. இக்காலப்பகுதியில் மதக் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடக்குமாறு பொதுமக்களிடம், புத்தசாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பௌத்த மக்கள் வீட்டிலிருந்தவாறு மத அனுஷ்டனங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4ம் திகதி ஆரம்பமான விசாக பூரணை வாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 6, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க