fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய விண்வெளி ரொக்கட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்ளது..

ITN News Editor
By ITN News Editor மே 6, 2020 13:22

முன்மாதிரி விண்கலமாகவும் ரொக்கட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நிரந்தர விண்வெளி நிலையத்தை செயற்படுத்தல் மற்றும் சந்திரனிற்கு மனிதனை அனுப்புதல் போன்ற சீனாவின் இலக்குகளை அடைவதற்கான ஒரு சோதனையாக குறித்த ரொக்கட் பயணம் அமைந்துள்ளது. குறித்த ரொக்கட் அந்நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள ஹயினன் தீவிலிருந்து விண்ணிற்கு ஏவப்பட்டது. குறித்த ரொக்கட் விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரொக்கட்டிலிருந்து முன்மாதிரி விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று தனது பணியை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை விண்வெளி வீரர்களை ஒரே நாளில் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திறன்கொண்ட இந்த விண்கலத்தின் ஊடாக மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை 2022ம் ஆண்டில் நிறைவேற்ற சீனா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 6, 2020 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo