fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனாவை பரப்பாத வகையில் மக்களை அழகுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுமதி

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 21:06

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுகலை நிலையங்களை மீண்டும் திறக்குமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார். அழகு கலை நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சொந்தமோ பந்தமோ இல்லாத நபர் ஒருவரின் பேச்சுக்கு ஒருவர் கட்டுப்படுகின்றார் என்றால் அவர் சிகை அலங்கார நிபுணராகவே இருப்பார். இவரை நாடிவரும் வாடிக்கையாளர் மன்னராக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் அவர் சொல்லும் இடத்தில் இவர் அமர்வார். இதுவே சிகை அலங்கார தொழிலுக்குள்ள விசேட அம்சமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அழகு கலை நிலையங்களும் சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. அழகு கலை நிலையங்களுக்கான விதிமுறைகளை உருவாக்கும் வேறு எந்த நிறுவனமும் இல்லையெனவும் சுகாதார அமைச்சு மட்டுமே இதனை மேற்கொள்வதாகவும் அமைச்சர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார். போதுமான இட வசதியுடன் அமைச்சு வழங்கும் சுகாதார முறைகளை பின்பற்றி தொழிலை மேற்கொள்ளுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டது. அத்துடன் அழகு கலை நிலையங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் முறைகளை அறிமுகப்படுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. சுகாதார வைத்திய அலுவலகம் மூலம் இவை கண்காணிக்கப்படவுள்ளன.

அழகு கலை துறையில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருப்பதாகவும் சுகாதார ஆலோசனைகளின் பிரகாரம் தமது சேவைகளை செய்ய தயாராவிருப்பதாகவும் இச்சந்திப்பின் போது அழகு கலை நிபுணர்களினால் தெரிவிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 21:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க