fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு வாழ். குடிசைவாசிகள் 40 ஆயிரம் பேருக்கு அழகிய இல்லங்களில் வசிக்கும் வாய்ப்பு

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 20:56

கொழும்பு நகரில் வசிக்கும் குடிசைவாசிகளுக்காக 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, ஸ்டேடியம் கம, சிறிமுத்து உயன அருகில் ஆயிரம் வீடுகளை கொண்ட மாடிக் குடியிருப்பு நிர்மாணிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வீடும் 550 சதுர அடிகளை கொண்டதாகும். ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் இம்மாடி குடியிருப்பு திட்டம் நிர்மாணிக்கப்படுகின்றது. 5950 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது. 3 வருடங்களில் இத்திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய போது கொழும்பு நகர சேரிப்புற மக்களுக்காக 60 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் மூவாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களாக இப்பணிகள் தடைப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் இந்நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 20:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க