fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 20:54

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸூக்கும் இடையில் சந்திப்பொன்று விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வைரஸை கட்டுப்படுத்திய பின்னர் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் பொது சுகாதார நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸ் இச்சந்திப்பின் போது தெரிவித்தார். இலங்கையுடன் அமெரிக்காவானது எதிர்காலத்திலும் நம்பிக்கைக்குரிய பங்காளியாக செயற்படும் எனவும் அவர் மேலும் கூறினார். இலங்கையின் ஆடை கைத்தொழில் துறைக்கு அமெரிக்காவின் உதவியை வழங்குமாறு பிரதமர் இச்சந்திப்பின் போது கேட்டுக்கொண்டார். இலங்கையில் பிரதான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

பிரதமர் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அமெரிக்க தூதுவர் இச்சந்திப்பின் போது தெரிவித்ததுடன், தமது நாட்டின் இறக்குமதியாளர்களை தொடர்பு கொள்ள தற்போது பல்வேறு துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார். இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தற்போதைய கொரோனா தொற்றினால் எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து வெற்றிகரமாக விடுப்படுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் திருமதி எலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 20:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க