நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள், கஷினோக்கள், கிளப்புக்கள் ஆகிவற்றை மூட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 7ம் மற்றும் 8ம் திகதி ஆகிய இரு தினங்கள் வெசாக் பௌர்ணமி தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 10ம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.